அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று, தாசபளஞ்சிக சங்கம் சார்பில் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், வேள்வி பூஜையும் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 7.30 மணிக்கு, சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.