பதிவு செய்த நாள்
01
ஜன
2015
12:01
காரைக்கால் : காரைக்கால் ஐயப்ப தர்மசேவா சங்கம் சார்பில், பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலிலிருந்து, ரூ.4.5 லட்சம் மதிப்பில் சபரிமலை பக்தர்களுக்காக அன்னதான பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உப தலைவர் கணபதி, செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில், 5 ஆயிரம் கிலோ அரிசி, 20 டின் நல்லெண் ணெய், 200 லிட்டர் தேங்காய் எண்ணெய், 2 ஆயிரம் தேங்காய், 3 ஆயிரம் கிலோ காய்கறிகள், ரூ.60 ஆயிரம் மளிகை பொருட்கள் ஆகியவை லாரிகள் மூலம் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி, காங்., மாவட்ட தலைவர் பாஸ்கரன், சமாதான கமிட்டி உறுப்பினர்கள் சோழசிங்கராயர், தண்டாயுதபாணி, பகவான் பக்தர் ஜன சபை செயலாளர் பாரீஸ் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.