ராஜபாளையம்: ராஜபாளையம் பெரியசுரைக்காய்பட்டி வேணுகான பஜனாலயத்தின் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் ஸ்ரீராதே கிருஷ்ண ஹாலில் நடந்தது.இதையடுத்து முதல்நாள் நிகழ்ச்சியாக டிச. ,30ல் கணபதி ஹோமம், சுவாமிக்கு மகாபிஷேகம், தீபாராதனை, பஜனைகள் நடந்தன. நேற்று காலை 11 மணிக்கு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. சுவாமி கிருஷ்ணன், ஸ்ரீராதா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிற்பகல் அன்னதானம், மாலை வேணுகான மாதர் சங்கம் சார்பில் கோலாட்டம், இரவு சுவாமி வீதி உலா நடந்தன.இன்று வைகுண்ட ஏகாதசி நூற்றாண்டு விழா, நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கவரா நாயுடு சமூகத்தார் செய்து உள்ளனர்.