கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2015 12:01
கும்மிடிப்பூண்டி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று, சிறப்பு வைபவங்கள் நடைபெற உள்ளன.கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில் உள்ளது அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இன்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அக்கோவிலில் சிறப்பு வைபவங்கள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சி நிரல் (01.01.2015)
அதிகாலை 5:00 மணி சுப்ரபாத தரிசனம், கோ பூஜை அதிகாலை 5:30 மணி சொர்க்க வாசல் திறப்பு, தீபாராதனை காலை 7:00 மணி கருடசேவையில் சுவாமி வீதி உலா பிற்பகல் 12:00 மணி உச்சிக்கால பூஜை.