பதிவு செய்த நாள்
01
ஜன
2015
12:01
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், வரும் 2015 பிப்., 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. திருக்கழுக்குன்றத்தில், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற வேதகிரீஸ்வரர் திருக்கோவில், இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கி.பி. 7ம் நுாற்றாண்டில், மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட, பல்வேறு சிறப்புகளுடைய இக்கோவிலுக்கு, கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து, கோவிலுக்கு குடமுழுக்கு செய்வது வழக்கம். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து, 12 ஆண்டுகள் முடிந்ததால், மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.திருப்பணிகளை நன்கொடையாளர் நிதியின் மூலம் மேற்கொள்ள முடிவு செய்து வேதகிரீஸ்வரர் கோவில், விமானம், திரிபுரசுந்தரி அம்மன் கோவில், விமானம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், வரும் பிப்., 1ம் தேதி, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.