தியாகதுருகம் : வடதொரசலூர் அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த வடதொரசலூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி அய்யப்பன் சேவா சங்கம் சார்பில் 15 ம் ஆண்டாக விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதியுலாவில் பெண்கள் கைகளில் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.குருசாமி மாயவன் தலைமையில் பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பன்னீர்செல்வம், முருகன், மூர்த்தி, செல்வம், விக்னேஷ், சீனு செய்திருந்தனர்.