விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
அதனை தொடர் தீபாராதனை நடந்தது. இதில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் பழனிச்சாமி, செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.