ஆங்கில புத்தாண்டு தரிசனம்பழநியில் திரண்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2015 05:01
பழநி:பழநியில் பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.ஆங்கில புத்தாண்டு மற்றும் மாத கார்த்திகையை முன்னிட்டு பழநியில் நேற்று பக்தர் கூட்டம் அதிகரித்தது.அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ரோப் கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் வெளிப்பிரகாரம் முதல் படிப்பாதை வரை ஐந்து மணிநேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசித்தனர்.
பக்தர்கள் அவதி:பழநி பூங்காரோடு, கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, திருஆவினன்குடிகோயில் பகுதிகளில் ரோடு, நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. அடிவாரம் நடைபாதையில் உள்ள தள்ளுவண்டி, தட்டுவியாபாரிகள் கிரிவீதி நடுரோடுவரை குவிந்திருந்தனர். போதுமான அளவிற்கு போலீசார் இல்லாததால் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர்.