அய்யப்பனின் தங்க அங்கியை சுமந்த சேவா சங்க உறுப்பினர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2015 05:01
வத்தலக்குண்டு : பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அய்யப்ப சேவா சங்க உறுப்பினர் ஐந்தாம் ஆண்டாக சுவாமியில் தங்க அங்கியை சுமக்கம் பெருமையை பெற்றார்.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ராமையா, 46, அய்யப்ப சேவா சங்க உறுப்பினராக உள்ளார். 26 ஆண்டுகளாக சபரிமலையில் சேவை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, சபரிமலை தேவஸ்தானம் சுவாமியின் தங்க அங்கியை பம்பையிலிருந்து சந்நிதானத்திற்கு சுமக்க அனுமதியளித்து வருகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக தங்க அங்கி சுமந்த ராமையா கூறுகையில்,""ஆண்டிற்கு ஆண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சேவை செய்வதற்கான நபர்களின் தேவையும் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் சேவா சங்கத்தில் இணைந்து சேவை செய்ய முன் வர வேண்டும் என்றார்.