பதிவு செய்த நாள்
03
ஜன
2015
12:01
தியாகதுருகம்: தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. சொர்க்க வாசல் திறந்து சர்வ அலங்காரத்தில் தம்பதி சமேதராய் சீனுவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூ ஜைகளை வெங்கட்ராமன் பட்டாச்சாரியார் செய்தார். சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, ரங்கராஜிலு, ராதாகிரு ஷ்ணன், ஆரியவைசிய சங்க தலைவர் அபரஞ்சி, பேரூராட்சி தலைவர் விஜயாராஜூ, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம்சுந்தர், டாக்டர் சரவணன், தட்சிணாமூர்த்தி, நல்லாப்பிள்ளை, சுகுமார், முருகன், சிவக்குமார், பா.ஜ., நகர தலைவர் சங்கர், கலந்து கொண்டனர்.