பொள்ளாச்சி : பொள்ளாச்சி திப்பம்பட்டி ஒன்னம்மாள் சமேத தொட்டராய சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. கோவில் அருகே தென்னை ஓலையால் வேயப்பட்ட சொர்க்க வாசல் அமைக்கப்பட்டது. ஊர் பொதுமக்களால் திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இரவு முழுக்க விரதமிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதிடர் ஜோதிகிருஷ்ணா செய்திருந்தார். ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.