பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி திருவாதிரை திருநாள் எனும் ஆருத்ரா தரிசன விழா நிகழ உள்ளது. அன்று அதிகாலை 3.00 மணிக்கு மகா அபிஷேகம், காலை 6.00 மணிக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் பட்டி வலம் வருதல், 6.40 மணிக்கு மங்கல நாண் அணிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் சுமங்கலி பெண்களுக்கு மங்கல நாண் வழங்கப்படும். பொதுமக்கள் திருவிழாவுக்கு பிரசாதமாக, திருவாதிரை களி செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், நெய், தேங்காய், பூக்கள் அளிக்கலாம்.