விருத்தாசலம்: மாசி மகத்தை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனம் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகப்பெருவிழா வரும் பிப்ரவரி 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பொது மக்களின் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுக்காக முட்புதர்கள் மண்டிக்கிடந்த, 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள நந்தவனம் சீரமைப்பு பணி நேற்றுத் துவங்கியது.