திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2015 11:01
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 244 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் சொரிமுத்து, முன்னாள் அறங்காவலர் சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெங்கடாம்பேட்டை வேணுகோபால் சுவாமி தன்னார்வ தொண்டர்கள் மார்கண்டேயன் தலைமையில் மகளிர் குழுவினர் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 244 ரூபாய் பக்தர்கள் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.