சோழவந்தான் : சோழவந்தான் நாடார் புதுதெரு பத்ரகாளியம்மன் கோயிலில் மார்கழி மாத லட்சார்ச்சனை பூஜை நிறைவு பெற்றது.சிவாச்சாரியார்கள் ரவிசுப்பிரமணியம், பரசுராமகண்ணன் தலைமையில் அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் முருகேசன், துணைத்தலைவர் அண்ணாமுருகன், செயலாளர் ஜவஹர், துணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் சண்முகராஜா செய்திருந்தனர்.