சிவகிரி: சிவகிரி திரு.வி.க. தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ விஜயலட்சுமி தாயார் சமேத வெங்கடேசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.யாஹபூஜைகள் 11ம் தேதி துவங்கின. 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 7.30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்த நாமம் முழங்க, வெங்கடேசப் பெருமாள், விஜயலட்சுமி தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவருதல் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது.