மதுரை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசன கட்டண முறையை ரத்து செய்ய இந்து ஆலய பாதுகாப்பு குழு வலியுறுத்தியது. மதுரையில் இதன் நிர்வாகிகள் கூட்டம் பொதுச் செயலாளர் சுந்தர வடிவேல் தலைமையில் நடந்தது. செயலாளர் சண்முகசுந்தரம் நிர்வாகிகள் கனகாம்பாள், சீனிவாசன், ராம்குமார், கமலம், ஜெயசந்திரன் பங்கேற்றனர். மீனாட்சி கோயிலில் தை மகத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.