சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மார்கழி மாத பூச விழா நடந்தது. மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துகருப்பன், பாலு, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல்படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை நடந்தது. சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது. சங்கர் நன்றி கூறினார்.