பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
உடுமலை : உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில், கூடாரவள்ளி உற்சவம் நாளை 11 ம் தேதி நடக்கிறது. கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கூடாரவள்ளி உற்சவம் திவ்ய தேசங்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் இந்தாண்டு, நாளை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் துவங்குகிறது. மார்கழி மாதம் பாவை நோன்பை பின்பற்றுபவர்கள், உற்சவத்தன்று, கண்ண பெருமாளை பாடியும், புத்தாடை அணிந்து, கோவிலில், வழங்கப்படும் பிரசாதத்தை உண்டும், விரதத்தை நிறைவு செய்கின்றனர். தொடர்ந்து, அன்று மாலை 5:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது, என்றனர்.