சிவகங்கை: திருக்கோஷ்டியூர்
அருகே உள்ள வைரவன்பட்டி பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் ஸகித பால
கால பைரவர் கோயிலில் 13ம் தேதி அன்று மஹா பைரவ அஷ்டமி பெருவிழா சிறப்பாக
நடைபெறுகிறது. இக்கோயில் சிவகங்கை சமஸ்தானம் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி
நாச்சியார் ஆளுகைக்கு உட்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை
சமஸ்தானம் மேலாளர் பா. இளங்கோ,கண்காணிப்பாளர் எம். வேல் முருகன், எஸ்.
ராமமூர்த்தி சிவாச்சாரியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
மாலை 3.30 மணி- மங்கள வாத்தியம் 4.00 மணி- தேவார திருமுறை பாராயணம் 4.30 மணி- பாணி வாத்தியம் 4.45 மணி- மஹா கணபதி பூஜை மற்றும் விசேஷ ஜெப ஆராதனை 5.00 மணி- மஹா பைரவ ஹோமம்
இரவு 7.00 மணி- மகா பூர்ணாஹுதி 7.30 மணி- லட்சார்ச்சனை ஆரம்பம்
8.30 மணி- மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
இந்த
பைரவரே தென் பாரதத்தின் முதல் பைரவராக கருதப்படுவதால் வேள்வியும்,
பாராயணமும், லட்சார்ச்சனையும் நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள்
மற்றும் சிவாச்சாரிய பெருமக்களை கொண்டு நடைபெறுகிறது.