பதிவு செய்த நாள்
12
ஜன
2015
11:01
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. திட்டக்குடி வதிட்டபுரம் திரு மகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம், ராப்பத்து உற்சவம் நிறைவுற்று, நம்மாழ்வார் மோட்சம் வைபவம் ÷ நற்று முன்தினம் இரவு நடந்தது. அரங்கநாதபெருமாள், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெருமாள் மற்றும் நம்மாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வெளிப்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்மாழ்வாருக்கு, பெருமாள் மோட்சம் அளிக்கும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வைபவத்தில் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். பொள்ளாச்சி வரதராஜ பெருமாள் கோவில் தலைமை பட்டாச்சாரியார் வரதவேணுகோபால், திருவாழித்திருணகிரி செம்பார் சவுரிராஜ சுவாமிகள், வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார் சுவாமிகள் வழிபாட்டினை நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார்கள் முத்து÷ காவிந்தாச்சாரியார், ராகவன், சுதாகரன் செய்திருந்தனர்.