கால பைரவர் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 02:01
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், மூலிகை உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கணக்கர் சரவணன், கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.