பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
பெங்களூரு: ஹலசூரு காளியம்மன் கோவிலில், நாளை குபேர கணபதி ஹோமம் நடக்கிறது. பெங்களூரு ஹலசூரு காளியம்மன் கோவிலில், நாளை, 18ம் தேதி காலை, 9:00 மணியிலிருந்து, 11:30 மணி வரை குபேர கணபதி ஹோமம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு படிப்பு தடை, ஞாபக மறதி, பாடங்களில் ஆர்வமின்மை ஆகியவை நீங்கும். மேலும், மாணவ, மாணவியரின் தவறான சவகாச தோஷம், மருந்துகளால் தீராத நோய்கள் நீங்கும். சங்கல்ப பூஜைக்கு, 161 ரூபாயும், சங்கல்பம், பூஜை, அன்னதானத்துக்கு, 501 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஹோமத்தில் அனைவரும் பங்கேற்று, குபேர கணபதியின் அருளை பெறுமாறு, ஆலய தர்மகர்த்தா பத்மநாபன் கேட்டுக் கொண்டுள்ளார்.