பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
மயிலாப்பூர்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று, 133 நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் இசை ஆராதனை நிகழ்த்தினர். பொங்கல் திருவிழாவின் மறுநாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, மங்கள இசைக் கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில், நேற்று, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 133 குறட்பாக்களை நினைவூட்டும் வகையில், 133 நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் இணைந்து, திருவள்ளுவருக்கு, இசை ஆராதனை நிகழ்த்தினர். விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்களும், பகுதிவாசிகளும் கலந்து கொண்டனர்.