பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும், தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை, சென்னை, மகாத்மா காந்தி சாலை, ரோசி டவர், மூன்றாம் தளத்தில் உள்ள, தமிழ்நாடு ஹஜ் குழுவின் செயலர் மற்றும் செயல் அலுவலரிடம் இருந்து, 19ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, www.hajcommittee.com என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நகல் எடுத்தும் உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பிப்., 20ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது, 2015 மார்ச் 20ம் தேதி வரை செல்லத்தக்க, கம்ப்யூட்டர் வழி பதிவு செய்யக்கூடிய, பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். ஐ.எப்.எஸ்.சி., குறியீடு உடைய வங்கியில் உள்ள, தங்களின் கணக்கு விவரங்களை, மனுதாரர் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், பயணி ஒருவருக்கு, 300 ரூபாய், திருப்பி தரப்படாத பரிசீலனை கட்டணமாக, பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டம் மூலம், இந்திய ஹஜ் குழுவின் கணக்கில் செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலை, இணைக்க வேண்டும்.