பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கிரிகுஜாம்பிகைக்கு, தைலக்காப்பு விசேஷ பூஜை நடைபெற்றது.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிறையணி அம்மன் உடனாய நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, இங்கு லட்சுமி, சரஸ்வதியுடன் கிரிகுஜாம்பிகை அம்பாள் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் அபிஷேகம் ஏதும் நடைபெறுவதில்லை. ஆண்டுதோறும் தை முதல் தேதியன்று நள்ளிரவில், தைலக்காப்பு பூஜை நடைபெறும். அன்று முதல், 48 நாட்களுக்கு அம்பாள் கழுத்து வரை திரையால் மறைக்கப்பட்டு, அம்பாளின் முகம் மட்டுமே பக்தர்களால் தரிசிக்க முடியும். நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், தயிர்பள்ளயம் படைக்கப்பட்டு, விசேஷ பூஜைகளுடன் தைலக்காப்பு செய்யப்பட்டது. கிரிகுஜாம்பிகை சன்னதியில், லட்சார்ச்சனை தொடக்க விழா நடந்தது. முன்னதாக சிறப்பு ஆராதனைகளும், மஹா தீபாராதனையும் நடந்தது. லட்சார்ச்சனை பூர்த்தி மாசி, 18ம் தேதி நடைபெறும். அதுவரை, தினசரி லட்சார்ச்சனை தொடர்ந்து நடக்கிறது. லட்சார்ச்சனை தொடக்க நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் கலந்து கொண்டனர்.