திருமங்கலம்:திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரத்தில் உள்ள முனியாண்டி சுவாமி கோயில் 52வது ஆண்டு பூஜை விழா நடந்தது. காப்புக்கட்டிய பக்தர்கள் பால்குடம், பூஜை தட்டுகளுடன் கிராமத்தில் ஊர்வலமாக வந்தனர். திருமங்கலம் பகுதி மற்றும் வெளியூரில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, நேற்று காலை முதல் மாலை வரை அசைவ விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி., சித்தன் உட்பட பலர் கலந்து பூஜையில் கொண்டார்கள். ராமமூர்த்தி, கொண்டல்சாமி உள்ளிட்ட கோயில் கமிட்டி நிர்வாகிகள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.