புதுச்சேரி: லாஸ்பேட்டையில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. திரவுபதி அம்மன் தேவஸ்தானத்தை சேர்ந்த பொன்னியம்மன் கோவில் திட லில், காலை 8:00 மணி முதல் தொடர்ந்து, பொன்னியம்மனுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதையடுத்து, நேற்று மாலை 3:00 மணியிலிருந்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.மாலை 6.00 மணியளவில், அம்மனுக்கு தீபாராதனை மற்றும் மஞ்சு விரட்டு நடந்தது.திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.