கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன. 21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவையொட்டி ஜன. 20ல் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயகர் முன் பூஜைகள் நடக்கிறது. ஜன. 21 காலை 10.30 முதல் 11 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஜன. 29ல் தைக் கார்த்திகையும், காலை 10 மணிக்கு சிறிய வைரத் தேரோட்டமும், ஜன. 30ல் ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி காலை, மாலையில் தலா மூன்று சுற்றுக்கள் சுற்றி தெப்பத்திருவிழா நடக்கிறது. ஜன. 31ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.