குடந்தை கற்பக விநாயகர் கோவிலுக்கு ரூ.25 லட்சம் செலவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2011 11:06
கும்பகோணம்: கும்பகோணம் மோதிலால் தெருவில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விநாகர் கோவில் உள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு இக்கோவிலுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 25 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 10ம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கியது. யாக சாலை பூஜையை திருப்பனந்தாள் காசி திருமடம் காசிவாசி ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்றாம் கால யாக சலை பூஜையை திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீ சுப்பிரமணிய கட்டளை தம்பிரான் சுவாமிகள் துவக்கிவைத்தார். மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியத்தோடு புறப்பட்டு விமானத்தை அடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.