Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் தச தீர்த்தவாரி ... திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி: முதல் பரிசை தட்டி சென்ற பார்வை இல்லாத பெண்! திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் பாரம்பரிய செவ்வாய் பொங்கல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2015
10:01

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா நடந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்விழாவை கண்டு மகிழ்ந்தனர். நாட்டரசன்கோட்டையில் நகரத்தார் சார்பில் செவ்வாய் பொங்கல் ஆண்டுதோறும் தை பொங்கலுக்கு அடுத்த செவ்வாய், அல்லது அந்த மாதத்தின் முதல் செவ்வாயன்று கொண்டாடப்படும். கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் முன் இவ்விழா நடக்கும். வெளிநாடு உட்பட எங்கிருந்தாலும் அச்சமூகத்தினர் வந்து விடுவர். குலுக்கல் முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் நாளே புள்ளிகள் (பொங்கலிடும் நபர்) தேர்வு நடக்கும். இவ்வாண்டு செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. குலுக்கலில் தேர்வான நாட்டரசன்கோட்டை கண்ணப்பன் 5 மணிக்கு பொங்கல் வைத்தார். இதன் பின், பிறர் பொங்கல் வைத்தனர். இம்முறை நகரத்தார் சார்பில், 899 பேரும், 100க்கும் மேற்பட்ட பிற சமூகத்தை சேர்ந்த பெண்களும் பொங்கலிட்டனர்.முன்னதாக பேரூராட்சி சார்பில், சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் அமெரிக்க, பெல்ஜியம், ஈரான், சிங்கப்பூரை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாரம்பரிய வழக்கப்படி மேள, தாளம் கிராமிய கலை நிகழ்ச்சியுடன் மாட்டுவண்டிகளில் பொங்கல் திடலுக்கு அழைத்து வந்தனர். பாகனேரியில் நகரத்தார்களின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் நடைபெற்றது.ராகு காலம் முடிந்த உடன் சரியாக 4.31 மணிக்கு புல்வநாயகியம்மன் கோவில் எதிரே தீபாராதனை நடத்தி 503 அடுப்புகளிலும் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். முதல் அடுப்பில் பொங்கல் வைத்த வடுகநாதன் செட்டியார் குடும்பத்தினரை வீடுவரை அழைத்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar