பதிவு செய்த நாள்
21
ஜன
2015
10:01
சிதம்பரம்: தை அமாவாசையை முன்னிட்டு தச தீர்த்த உற்சவத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் சுவாமி அனந்தீஸ்வரர் கோவில் அனந்த தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, நடராஜர் பெருமானுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்தில் சுவாமி எழுந்தருளி, அஸ்தராயருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து இரவு புறப்பாடு செய்து கிள்ளை கடற்கரையில் நேற்று காலை 6:00 மணிக்கு குய்யா தீர்த்தவாரி நடந்தது. அம்மாபேட்டை சக்தி நகர் புலிமேடு, இளமையாக்கினார் கோவில் வியாக்கிரபாதர் தீர்த்தம், அனந்தீஸ்வரன் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தக் குளம், சிங்காரத்தோப்பு பிரம்ம தீர்த்த குளம், தில்லையம்மன் கோவில் சிவப்பிரியை குளம், வேங்கான் தெரு திருப்பாற்கடல் திருக்குளம், சன்னதிக்கு அருகில் உள்ள நடராஜர் அபிஷேக கிணறு அருகில் பரமானந்த கூபம் (கிணறு) ஆகிய இடங்களில் எழுந்தருளி அஸ்தராயருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவ ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் பொதுதீட்சிதர்கள் செய்தனர்.