பதிவு செய்த நாள்
21
ஜன
2015
10:01
பவானி: தை அமாவாசையான நேற்று, பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஈரோடு மாவட்டம். பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், காசிக்கு இணையான ஸ்தலமாக கருதப்படுகிறது. கோவிலின் பின்புறம், காவிரி, பவானி உள்ளிட்ட நதிகள் சங்கமிப்பதால், இவ்விடத்தை கூடுதுறை என அழைப்பர். இவ்விடம், சிறந்த பரிகார ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகிறது. தை அமாவாசையான நேற்று, அதிகாலை முதல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின், தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.