கீழக்கரை : திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரையில் மகாளய, தை, ஆடி ஆமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர் களுக்கு திதி கொடுத்து விட்டு, கடற்கரை முன் உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் வழிபடுவார்கள். கடலில் புனித நீராடு வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த படித்துறையின் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து சேதுக்கரை ஊராட்சித்தலைவர் பி.முனியாண்டி கூறுகையில், ""மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, திருப்புல்லாணி யூனியன் மூலமாக ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மீண்டும் சேதமடையாத வகையில் தரமிக்க படித்துறை அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வரும், என்றார்.