நடராஜர் கோவில் கிழக்கு சன்னதியில் கான்கிரீட் கூரை அமைக்க பூமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2015 11:01
சிதம்பரம்: தருமை ஆதீனம் சார்பில் நடராஜர் கோவில் கிழக்கு சன்னதியில் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் கூரை அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் தருமை ஆதீனம் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு சன்னதியில் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் கூரை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று கிழக்கு சன்னதியில் நடந்தது. நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் கட்டளை தம்பிரான் குமாரசாமி தம்பிரான் தலைமையில் நடராஜர் கோவில் கட்டளை தீட்சிதர் நடராஜ கணேச தீட்சிதர் சிறப்பு பூஜைகள் செய்தார். கட்டளை தம்பிரான், கவுன்சிலர் அன்பழகன் முதல் கல் வைத்து பணியை துவக்கினர். நிகழ்ச்சியில் கணபதி, சுவேதாகுமார், கவுன்சிலர் நடனசபாபதி தீட்சிதர், சிவராமன் தீட்சிதர், சுந்தர், இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.