பதிவு செய்த நாள்
27
ஜன
2015
11:01
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் செய்யாற்றங்கரையில், ரத சப்தமியை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கலசப்பாக்கம், செய்யாற்றங்கரையில், ரதசப்தமியை முன்னிட்டு, அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7 மணிக்கு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து செய்யாற்றங்கரைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது, செல்லும் வழியில் தனக்கோட்டிபுரத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு, சொந்தமான இடத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் கலசப்பாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் செய்யாற்றை வந்தடைந்தனர். அங்கு உ ண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். இதை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.