திட்டக்குடி: தொழுதுõர் ஸ்ரீஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர். திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கடந்த 26ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 27ம் தேதி தொழுதுõர் ஸ்ரீஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர். கல்விக் குழுமங்களின் செயலர் ராஜபிரதாபன், தொழிலதிபர் ராஜன், கல்லூரி இயக்குனர் அப்துல் ஜலீல், கல்லூரி முதல்வர் சந்துரு, திட்டக்குடி நாவலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் குமரவேல், கோவில் குருக்கள் தண்டபாணி, ஒப்பந்ததாரர் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.