திண்டுக்கல்: சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா, திண்டுக்கல்லில் நாளை சங்கல்ப பூஜையுடன் நடக்க உள்ளது. கிருஷ்ணமணி கண்ணன் கம்யூனிட்டி ஹாலில் நாளை காலை 7 மணிக்கு சங்கல்ப பூஜையுடன் நிகழ்ச்சியை துவக்குகின்றனர். மதியம் 2:30 மணிக்கு சத்திரப்பட்டி அடையாள வேல் சன்னதி அருகே 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை வி.மணிவாசகம் தலைமையில் கிளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.