பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன் பேகாரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோதிபட்டி கொட்டாவூரில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் வேடியப்பன், முத்து வேடியம்மாள் மற்றும் ஈஸ்வரன், விஷ்ணு, காளியம்மாள், அய்யனார் நவக்கிரகம், நாகர்கோவில் மஹா கும்பாபிஷேக விழா 19ம் தேதி நடக்கிறது.
ஜூன் 17ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனையும், இரவு 11 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, தீபாராதனையும் நடந்தது.
ஜூன் 18ம் தேதி காலை 8.30 மணி முதல் விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜையும், தீபாரதனையும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹதியும், இரவு 8 மணிக்கு ஸ்வாமி வேடியப்பன் முத்து வேடியம்மாள் மற்றும் விமான கலச பிரதிஷ்டைகள் நடக்கிறது.
19ம் தேதி காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையும், பிம்பசுத்தியும், காலை 9.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தர்மபுரி அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் குருக்கள் கிருபாகரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.