பதிவு செய்த நாள்
02
பிப்
2015
03:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று
நடந்தது.கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், செம்பொற்ஜோதிநாதர் கோவில், நீலமங்கலம்
ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், தென்கீரனூர் மற்றும் முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர் கோவில், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளும் நடந்தது. உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேவாரம், திருவாசகம் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்தது.
சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு
அண்ணாமலையார் அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.