திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை வரும், 3ம் தேதி மாலை சாத்தப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாவட்டம், கொள்ளிடம் வடதிருக்காவேரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சிக்கு, செல்ல இருப்பதால், வரும், 3ம் தேதி மாலை, 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மறுநாள் அதிகாலை, 5.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலஸ்தான அம்மாள் சேவை நடை பெறும். இவ்வாறு அதில் கூறப்படுகிறது.