பதிவு செய்த நாள்
03
பிப்
2015
12:02
திருக்கழுக்குன்றம்: ஆனூர் அஸ்தபுரீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பாலாலயம் நடைபெற்றது. பொன்விளைந்த களத்தூர் அடுத்த, ஆனூர் கிராமத்தில், 1,300 ஆண்டுகளுக்கு முன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த அஸ்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் தற்போது, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஆனூர் முன்னேற்ற அறக்கட்டளையினர், இந்து அறநிலைய துறையிடம் அனுமதி பெற்று, மூலவர் விமானம் மற்றும் கோவிலை, 3.90 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்தனர்.
இதற்கான சிறப்பு புஜைகள் செய்து, நேற்று முன்தினம் பாலாலயம் நடைபெற்றது. விழாவில், செயல் அலுவலர் கேசவராஜ், அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.