பதிவு செய்த நாள்
03
பிப்
2015 
01:02
 
 திருக்கோவிலூர் : திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில், மகாசக்தி மாரியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.காலை 7:00 மணிக்கு நான்காம் காலயாகபூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்சாகுதி, விசேஷ திரவ்யாகுதி, பூர்ணாகுதி முடிந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கடம் புறப்பாடாகியது. 
சக்தி விநாயகர் அதனைத் தொடர்ந்து மகாசக்தி மாரியம்மன் மூலகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை சக்திவேல், தியாகராஜன், சாந்திபால், டாக்டர் பால்ராஜ், தொழில்அதிபர்கள் செல்வராஜ், கண்ணப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், தொழிலதிபர்கள் டி.கே.டி.முரளி, பேரூராட்சி தலைவர் தேவிமுருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, நகர செயலாளர் இளவரசன், கவுன்சிலர்கள் தங்கராஜ், சம்பத், ரேவதி, வள்ளிவினோபா உட்பட கலந்து கொண்டனர்.சிவாச்சாரியார்கள் ரமேஷ், மகாதேவன் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.