திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கடந்த 31ம் ÷தி கணபதி ஹோமம் மற்றும் கோ-பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சபர்சாஹூதி, நாடிசந்தானம், மகா பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து கடம் புறப்பாடாகி விநாயகர், முருகன், திரவுபதியம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்களில் வரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர்.மதியம் 1:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் திருவீதியுலா நடந்தது.