விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆலை ரோட்டிலுள்ள அய்யனாரப்பன் ஆலயத்திலிருந்து ஊராட்சி தலைவர் ரேணுகா ராஜவேல் தலைமையில் பக்தர்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலம் சென்றனர்.
கோவிலில் சுவாமிக்குஅலகு குத்தி வழிபட்டனர் . ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மாசிலாமணி, வார்டு உறுப்பினர் கமலி கணபதி, முன்னாள் தலைவர் கருணாகரன், வங்கி தலைவர் புருஷோத்தமன் செய்திருந்தனர்