பதிவு செய்த நாள்
05
பிப்
2015
01:02
ஓமலூர்:ஓமலூர், பல்பாக்கி ஓம் காளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
ஓமலூர் அருகே, பல்பாக்கியில், ஓம் காளியம்மன், மகாமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, 21ம் தேதி கம்பம் நடுதல்நிகழ்ச்சியும், 29ம் தேதி, காளியம்மன், மகாமாரியம்மன் கோவில் தேர்களுக்கு ஆயக்கால் நடும் நிகழ்ச்சியும், அபிஷேக பூஜையும் நடந்தது.நேற்று காலையில், சக்தி கரகம், பொங்கல் விழா, காளியம்மன், மாரியம்மன் சிங்க வானத்தில் திருவீதி உலா நடந்தது. மாலை நான்கு மணிக்கு, காளியம்மன் தேரோட்டம் நடந்தது.
ஓமலூர் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் அசாம்பிகை மற்றும் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இன்று மாலை நான்கு மணியளவில், மகாமாரியம்மன் தேரோட்டம் நடக்க உள்ளது. பின்னர், வண்டி வேடிக்கை, கேரள செண்டமேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 6ம் தேதி காவடியாட்டம், மாவிளக்கு பூஜை, சத்தாபரணம், வண்டி வேடிக்கை, அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.