Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்லல் கும்பாபிஷேகம்! பழநியில் தைப்பூச விழா தெப்ப உற்சவம்! பழநியில் தைப்பூச விழா தெப்ப உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்ரவரி 6 முதல் விவேகானந்த நவராத்திரி கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2015
02:02

பிப்ரவரி  6 முதல் விவேகானந்த நவராத்திரி: சென்னை ராமகிருஷ்ண மடத்தில் கோலாகலம்

சுவாமி விவேகானந்தர் இந்திய ஆன்மிகத்தின் வெற்றிக் கொடியை மேலை நாடுகளில் நாட்டிவிட்டு, தாயகம் திரும்பிய வேளையில் சென்னை மாநகரம் மிகவும் குதூகலித்தது. அப்போது அவருக்கு அளித்த வரவேற்பு போல பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்ற சுவாமி விவேகானந்தர் சென்னையில் கேசில் கெர்னன் (ஐஸ் ஹவுஸ்) எனப்படும் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வே விவேகானந்த நவராத்திரி ஆனது.

சுவாமிஜி தங்கிய ஒவ்வொரு நாளும் அவரது ஆற்றல் மிக்கச் சொற்பொழிவுகள், போட்டிகள், என்று கேசில் கெர்னன் ஓர் ஆனந்தச் சந்தையாகவே மாறிவிட்டிருந்தது. அந்த தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப் பெற்ற அனைவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். இந்த நாட்களில்தான் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட முக்கியச் சொற்பொழிவுகளை அவர் ஆற்றினார். பிப்ரவரி 8 அன்று மாலை 4.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் அவருக்குக் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் பத்தாயிரம் பேர் அதில் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 9-ம் ஆம் நாள் நம் முன் உள்ள பணி என்ற தலைப்பிலும், மாலையில் எனது போர்முறை என்ற தலைப்பிலும், பிப்ரவரி 11- அன்று இந்திய ரிஷிகள் என்ற தலைப்பிலும், பிப்ரவரி 13 அன்று வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும், ஆகிய தலைப்பிலும் சொற்பொழிவுகள் செய்தார்.

பிப்ரவரி 15 அன்று சுவாமிஜி கல்கத்தா திரும்புகையில் சென்னையில் நிரந்தர அமைப்பு ஒன்றை நிறுவத் தமது சகோதரத் துறவி ஒருவரை சென்னைக்கு அனுப்புவதாக அன்பர்களிடம் தெரிவித்தார். அதன்படி சென்னை வந்து ராமகிருஷ்ண இயக்கத்தைத் தொடங்கியவர் சசி மகராஜ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆவார். அன்று அவர் தொடங்கிய ராமகிருஷ்ண இயக்கம் இன்று ஆலமரம் போல் பரந்து வளர்ந்து வருகிறது.

சென்னையில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் 1897 பிப்ரவரி 6 முதல் 14 வரை ஒன்பது நாட்கள் தங்கியதால் அது புனிதம் பெற்றது. இந்த நாட்கள் விவேகானந்த நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் தங்கிய அந்தப் புனித நாட்களை நினைவுகூரும் வண்ணம் 6.2.2015 வெள்ளி முதல் 14.2.2015 சனிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சி நிரல்!

6.2.2015 வெள்ளி

மாலை 5.30    விவேகானந்த நவராத்திரி விழா
குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைப்பவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜிமகராஜ்     தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை

டாக்டர் திரு நல்லி குப்புசாமி செட்டியார்,
தொழிலதிபர், சென்னை

மாலை 5.40    அறிமுகம், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 6.00    பஜனை- ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் மாணவர்கள்       
மாலை 6.45   சிறப்புரை- திரு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
இரவு   7.00     சிறப்புரை- திரு மதி, கார்டூனிஸ்ட், தினமணி நாளிதழ்
இரவு   7.30     ஆசியுரை- ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
இரவு   8.00     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.15     பிரசாதம்
                   
7.2.2015 சனி

மாலை 5.30   சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்  பஜனை மற்றும் கலை                               நிகழ்ச்சிகள், ஸ்ரீராமகிருஷ்ண மடம்
                          விவேகானந்தர் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மின்ட்
மாலை 6.15   சென்னை இளைஞர்களுக்கு விவேகவாணி-  சொற்பொழிவு:சுவாமி 
                           சத்யபிரபானந்தர் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், தி.நகர்
மாலை 6.45    ஹரி கதை: தியாகராஜரின் ஸ்ரீராம அனுபவம்- செல்வி ஆர். வர்ஷா  
                           புவனேசுவரி,   சென்னை
இரவு   8.15     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.30     பிரசாதம்

8.2.2015 ஞாயிறு

மாலை 5.30    சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 5.45    விவேகானந்தரின் பிரார்த்தனைகள்- சொற்பொழிவு:
                           சுவாமி புத்திதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை
மாலை 6.15    பக்திப் பாடல்கள்- டாக்டர் எஸ். ஸெளம்யா
                           கர்நாடக இசைக் கலைஞர், வீணை விதூஷி
இரவு   8.15     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.30     பிரசாதம்

9.2.2015 திங்கள்

மாலை 5.30     சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 5.45     பஜனை- ஸ்ரீமா பஜன் மண்டலி, சென்னை
மாலை 6.15     இந்தியாவிற்குப் புது ரத்தம் பாய்ச்சியவர்- சிறப்புச்  சொற்பொழிவு:     திரு   
                           ஸ்டாலின் குணசேகரன்
                            தலைவர், மக்கள் சிந்தனை பேரவை           
இரவு   7.00     கலை நிகழ்ச்சிகள்- ஜி.கே. செட்டி விவேகானந்த வித்யாலயா
                          ஜூனியர் காலேஜ், அம்பத்தூர்
இரவு   8.00     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.30    பிரசாதம்

10.2.2015 செவ்வாய்


மாலை 5.30     சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்   பஜனை-    
                             ராமகிருஷ்ண மிஷன் சாரதா வித்யாலயா  மே.நி.பள்ளி மாணவிகள்,    
                             தி.நகர்.           
மாலை 6.15     இந்து மதத்தை ஒருங்கிணைத்தவர் சுவாமி விவேகானந்தர்-   சிறப்புச்         
                            சொற்பொழிவு: திரு இல. கணேசன்
                            தலைவர், பொற்றாமரை - கலை இலக்கிய அரங்கம்
இரவு   7.00     ஓரங்க நாடகம்: சுவாமிஜியும் பாரதியாரும்- வழங்குபவர்: செல்வி டி. சபர்மதி, 
                          சென்னை
இரவு   7.15     குச்சிப்புடி நாட்டியம்: மதுரகலா நிகேதன்
                          குச்சிப்புடி நாட்டிய அகாடமி, சென்னை
இரவு   8.00     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.15     பிரசாதம்

11.2.2015 புதன்   
மாலை 5.30     சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 5.40     பஜனை - குஓNகுகMஇ விவேகானந்த வித்யாலயா    ஜூனியர்காலேஜ்,
                            பெரம்பூர்
மாலை 6.15     அளசிங்கபெருமாள்-சுவாமி விவேகானந்தரின் வீரச் சீடர்- சொற்பொழிவு:             
                              டாக்டர். வேங்கடகிருஷ்ணன், ஆசிரியர், கீதாச்சாரியன்
மாலை 6.45       கவியரங்கம்- தலைப்பு: விவேகானந்தர்- ஒரு பன்முகப் பார்வை
                              தலைவர்: கவிமாமணி வ.வே.சு.
                             குவலயத்தின் குரு: திரு. சந்தர் சுப்பிரமணியன்
                             சிறந்த சீடர்: திரு. சதீஷ்குமார்
                             சமுதாயச் சிற்பி: புலவர். இரா. இராமமூர்த்தி
                             தாயுள்ளம் கொண்ட துறவி: முனைவர். உலகநாயகி பழனி   
இரவு   8.00       நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குதல்
இரவு   8.15       பிரசாதம்

12.2.2015வியாழன்
மாலை 5.30   சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்  மற்றும்பஜனை-
                           ராமகிருஷ்ண மிஷன் பள்ளி, தி.நகர்
மாலை 6.15   ஹரிகதா: விவேகானந்த திக்விஜயம்- சுவாமி ஹரிவ்ரதானந்தர்
                           ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, கோயம்புத்தூர்           
இரவு   8.00      நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குதல்
இரவு   8.15      பிரசாதம்

13.2.2015 வெள்ளி
மாலை 5.30     சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 5.45     விவேகானந்தரைப் பின்பற்றுபவர்களின் சிறப்பு  சொற்பொழிவு-சுவாமி
                            அபவர்கானந்தர்
                            துணை ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
மாலை 6.15    உபந்யாஸம்- கிருஷ்ணாம்ருதம்
                           குமாரி சுசித்ரா பாலசுப்ரமணியம்
                           கர்நாடக இசைக் கலைஞர், சென்னை
இரவு   8.00     நன்றியுரை மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.15     பிரசாதம்

14.2.2015 சனி
மாலை 5.30   சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் வாசித்தல்
மாலை 5.45   சிறப்பு பஜனை- பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ்  ஸ்ரீவிட்டல்     ருக்மிணி                                   ஸம்ஸ்தான், கோவிந்தபுரம்
இரவு   7.45     நிறைவு உரை- சுவாமி விமூர்த்தானந்தர்
                          மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை
இரவு   8.00     நினைவுப் பரிசு வழங்குதல்
இரவு   8.15     பிரசாதம்

அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று தெய்வத் திருமூவரின் அருளைப் பெற சுவாமி கௌதமானந்தர் அன்புடன் அழைக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar