பதிவு செய்த நாள்
07
பிப்
2015
12:02
பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பால்குடஊர்வலம் நடந்தது. கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில், தைப்பூசதிருவிழாவை முன்னிட்டு,பால்குட ஊர்வலம் இடம் பெற்றது. இந்த ஊர்வலம் கொளப்பள்ளிபஜார், பேக்டரி மட்டம் வழியாக கோவிலைவந்தடைந்தது. தொடர்ந்து, பாலாபிஷேகமும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு முருகனுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தர்மகர்த்தா சிங்காரம் தலைமையில் தலைவர் தியாகராஜ், செயலாளர் கவிந்தன், பொருளாளர் அசோக் உள்ளிட்ட கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். பூஜைகளை பரமசிவம் குருக்கள் தலைமையிலான
குழுவினர் செய்தனர். நிகழ்ச்சியில், கொளப்பள்ளி, குறிஞ்சிநகர் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள்பங்கேற்றனர்.