பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
பழநி : தைப்பூச விழா காலகட்டத்தில் பழநிமலைக்கோயில் உண்டியலில் 16நாட்களில் ரூ.2.30 கோடி கிடைத்துள்ளது.
பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 665 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 445 கிராமும், வெளிநாட்டு கரன்சி 400, ரொக்கமாக இரண்டு கோடியே 29 லட்சத்தி 94 ஆயிரத்து 925 ரூபாய் வசூலாகியுள்ளது. தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். இன்றும் இரண்டாவது நாளாக உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.