யந்திரம் என்பது பூஜிக்கப் பயன்படும் கருவி. தமிழில் இயந்திரம் என்பதே வடமொழியில் யந்திரம் எனப் பெயர் பெறுகிறது. இறை சக்தியை இழுக்க யந்திரம் பயன்படுகிறது. பட்டுத்துணியிலே செம்பு, வெள்ளி அல்லது தங்கத் தகடுகளிலோ கோடுகள் வரைந்து, அந்தந்த தேவதைகளுக்குரிய மூலமந்திரத்தால் உருவேற்றிட, குறிப்பிட்ட தேவதையின் சக்தி கிடைக்கும். இதற்காகவே, யந்திரங்களை கோயில் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்கின்றனர்.